கடந்த நிதியாண்டில் ரெயில்வேக்கு எவ்வளவு கோடி வருவாய் தெரியுமா?

கடந்த நிதி ஆண்டில் ரயில்வேக்கு ரூபாய் 2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது . முந்தைய ஆண்டைய விட ரூபாய் 49 ஆயிரம் கோடி அதிகம்.

Update: 2023-04-19 01:00 GMT

கடந்த நிதி ஆண்டில் இந்திய ரெயில்வேக்கு மொத்தம் ரூபாய் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இத்தொகை முந்தைய நிதி ஆண்டில் கிடைத்ததை விட ரூபாய் 49000 கோடி அதிகம். சதவீத கணக்கில் 25% அதிகம். இந்த வருவாயில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது .

இது முந்தைய நிதியாண்டு கிடைத்ததை விட 15 சதவீதம் அதிகம் .பயணிகள் போக்குவரத்து மூலம் 63,300 கோடி கிடைத்துள்ளது .இது முந்தைய நிதியாண்டைய விட 61% அதிகம் .அதே சமயத்தில் மொத்த செலவினங்கள் ரூபாய் 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.



 


Similar News