வருமான வரி கூடுதலாக செலுத்தியிருந்தால் இனி எத்தனை நாட்களில் 'ரீபண்ட்' என்று தெரியுமா?

கூடுதலாக வருமான வரி செலுத்தி இருந்தால் ரீபண்ட் அளிப்பதற்கான கால அவகாசம் 16 நாளாக குறைக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-06-03 11:15 GMT

வருமானவரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில் சி.பி.டி.டி என்று அழைக்கப்படுகிற மதிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-


வருமானவரி கணக்குகளை பெற்று அவற்றை சரி பார்க்கும் பணி விரிவாக்கப்பட்டுள்ளது. வருமான வரி கூடுதலாக செலுத்தியிருந்தால் அவற்றை திரும்ப செலுத்துவதற்கான அவகாசம் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது .அது 2022-23 ஆம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.


2021 - 2022 ஆம் ஆண்டில் இது 21% ஆக இருந்தது. 2022- 2023-ஆம்  நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28- ஆம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மார்ச் 31- ஆம் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் ஆகின.


ரூபாய் 2480 கோடி கூடுதல் வரியாக வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இறுதியில் லட்சத்துக்கு அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளன. 2021- 22ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 - ஆம் நிதி ஆண்டில் முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60% குறைந்துள்ளது . முகமற்ற மதிப்பீடுகள் வழியாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News