சென்னையில் 6500 கி.மீ. மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும் - மின்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் 6500 கி.மீ. மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும் - மின்துறை அமைச்சர் அறிவிப்பு

Update: 2019-02-14 17:55 GMT

சட்டபேரவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கொளத்தூர் தொகுதியில் புதைவடம் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து தொடங்கப்படும். புதைவடம் அமைக்க பள்ளம் தோண்டாமல் புதைக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். சோழிங்கநல்லூர் தொகுதியில் 100 கோடி ரூபாய் செலவில் 526 கி.மீ. நீளத்திற்கு மின்கம்பிகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இடத்தை அடையாளம் காட்டினால் அந்த நிலத்தை மின்வாரியமே கையகப்படுத்தி துணை மின்நிலையம் அமைக்கும். கண்ணகிநகர் பகுதியில் மின் கணக்கெடுப்பு செய்ய விடாமல் அதிகாரிகளை அங்குள்ளவர்கள் விரட்டுகிறார்கள். எனவே, முறையாக கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணத்தை வசூலிக்க முடியாததால் அபராதம் விதிக்க நேரிடுகிறது. தாம்பரம் பகுதியில் மின்கம்பிகளை புதைவடமாக மாற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டதும், பணிகள் தொடங்கும்' என்று பதிலளித்துள்ளார்


Similar News