இந்தியாவில் கூகுள் செய்த முதலீடு: பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை தகவல்!
இந்தியாவில் கூகுள் ரூபாய் 82000 கோடி முதலீடு செய்துள்ளதாக பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து தகவல் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வாஷிங்டன் நகரில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தமிழருமான சுந்தர் பிச்சையை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் கூகுள் 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இதையொட்டி சுந்தர் பிச்சை கூறியதாவது:-
அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்தித்தது கௌரவமாகும். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் கூகுள் பத்து பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்பதை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தில் கிப்ட் சிட்டியில் எங்களது உலகளாவிய நிதி நுட்ப செயல்பாட்டு மையம் திறக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் கூகுள் பெங்களூர், ஹைதராபாத், குர்கான்- டெல்லி ,என் .சி., ஆர் மும்பை, பூனே ஆகி 5 நகரங்களில் அலுவலகங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.