30 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவியாக ரூ 28,256 கோடியை வெற்றிகரமாக செலுத்திய மத்திய அரசு

30 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவியாக ரூ 28,256 கோடியை வெற்றிகரமாக செலுத்திய மத்திய அரசு

Update: 2020-04-12 06:40 GMT

மோடி அரசின் முதல் ஐந்து வருட ஆட்சியில்  நிறுவப்பட்ட நேரடி நிதி பரிமாற்றம் திட்டத்தின் மூலம், பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 30 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவியாக ரூ 28,256 கோடியை வெற்றிகரமாக மாற்ற்றப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா, கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண நீதியுடன் அறிவிக்கப்பட்டது. நாட்டின் ஏழைகளுக்கு அவர்களின் கஷ்டங்களை போக்க ரொக்கம் மற்றும் இலவச உணவு தானியங்கள் போன்றவை பெற வழிவகை செய்கிறது.

நேரடி நிதி பரிமாற்றம் என்ற உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எட்டு கோடி விவசாயிகளில் கிட்டத்தட்ட 6.93 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ 13,855 கோடி மாற்றப்பட்டுள்ளது.

மேலும் தலா ரூ 500, 19.86 கோடி பெண்களின் ஜன தன் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் ரூ 9,930 கோடி தொகை மாற்றப்பட்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 2.82 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரின் கணக்குகளுக்கு சுமார் 1,400 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியிலிருந்து 2.16 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் 3,066 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

Similar News