சென்ற ஆண்டு பிப்ரவரியை விட 23 சதவீதம் அதிகமாக வசூலான ஜி.எஸ்.டி!
2024 பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டில் ரூபாய் 1.68 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த பிப்ரவரியில் மொத்த ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூபாய் 1,68,337 கோடியாகும். இது கடந்தாண்டு பிப்ரவரியில் வசூல் ஆன ஜி.எஸ்.டி வருவாயுடன் ஒப்பிடுகையில் 12.5% அதிகம் .கடந்த பிப்ரவரியில் மத்திய ஜி.எஸ்.டி.வசூல் ரூபாய் 31,785 கோடி மாநில ஜி.எஸ்.டி வரி வசூல் ரூபாய் 39, 615 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 84,098 கோடி செஸ்வரி வசூல் ரூபாய் 12,839 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வரி வருவாய், ரூபாய் 9,713 கோடி. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூபாய் 8,774 கோடி யுடன் ஒப்பிடுகையில் 11% அதிகம். இதே போல பிப்ரவரியில் புதுச்சேரியில் ஜி.எஸ்.டி வருவாய் ரூபாய் 231 கோடி இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூபாய் 188 கோடியுடன் ஒப்பீடுகளில் 23 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :Kaalaimani.com