நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதல்... துப்பாக்கி சூட்டில் பலியான மக்கள்... சோகத்தில் கிராமம்!
நைஜீரியாவில் நடந்த பயங்கர சம்பவம் தீவிரவாத தாக்குதலில் 50 பேர் பலி.;
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பேன்ட் மாகாணம் உமக்குடி என்ற கிராமத்திற்குள் நேற்று முன்தினம் மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி போல சுட்டு தள்ளிகிறார்கள். இந்த ஒரு சம்பவம் தான் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு நடந்த துப்பாக்கி சூடு தான் தற்பொழுது உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அந்த கிராமத்திற்குள் புகுந்த நபர்கள் பயங்கரவாதிகளாக தான் இருக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டு இருக்கிறது. இப்படி பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் மக்கள் அலறி எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடினார்கள், சிலர் பயத்தில் புதர்க்குள் ஒளிந்து கொண்டார்கள்.
இந்த கொடூர சம்பவத்தின் காரணமாக 50 க்கு அதிகமான நபர்கள் தங்களுடைய உயிர்களை இழந்து இருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar