500 ரூபாய் நோட்டு விவகாரம் - வைரலாகும் போலி செய்தி : மக்கள் நிம்மதியை சீர்குலைக்கும் மோசடி பேர்வழிகள்.! #FactCheck

500 ரூபாய் நோட்டு விவகாரம் - வைரலாகும் போலி செய்தி : மக்கள் நிம்மதியை சீர்குலைக்கும் மோசடி பேர்வழிகள்.! #FactCheck

Update: 2019-08-17 04:54 GMT
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப்கள் இருந்தால் அவை போலி என கூறும் தகவல் வைரலாகி வருகிறது. மேலும் பச்சை நிற ஸ்ட்ரிப்கள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்தின் அருகில் இருந்தால் அது உண்மையான நோட்டு என கூறப்படுகிறது.
500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப்கள் இருந்தால், அவற்றை ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆளுநர் கையெழுத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருந்தால் அதனை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தகவலை குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் தகவல்களின் படி ரூபாய் நோட்டுக்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவே பச்சை நிற ஸ்ட்ரிப் பயன்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் தகவல்களில் மகாத்மா காந்தி புகைப்படத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருப்பின் அது போலி நோட்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களில் மேலே வைரலாகும் குறுந்தகவல்கள் உண்மையில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நவம்பர் 8, 2016 இல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு பின் ரிசர்வ் வங்கி ரூ. 500 நோட்டுகளை இருவிதங்களில் வெளியிட்டது.
இருவித நோட்டுகளும் அதிகாரப்பூர்வமாக செல்லும். ஒன்றில் மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு நிழல் இருப்பது போன்றும், மற்றொன்றில் தேசிய சின்னம், நிறம் மற்றும் பார்டர் உள்ளிட்டவை இருக்கிறது. இவை ரூபாய் நோட்டுகள் அவசரகதியில் அச்சிடும் போது ஏற்பட்ட பிழை காரணமாக நடந்ததாக ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் ரூ. 500 போலி நோட்டுகளை வாங்க வேண்டாம் என வைரலாகும் தகவல் முற்றிலும் பொய் என்பது உறுதியாகிறது.

Similar News