தெற்கு ரயில்வே தொடர்பான சேவைகள் ஆன்லைன் ஏலத்தில் மூலம் இத்தனை கோடியா?

ஆன்லைன் ஏலத்தின் மூலம் 83 கோடிக்கு ஒப்பந்தங்கள் ரயில்வே தகவல்

Update: 2022-09-19 07:30 GMT

ரயில்வே தொடர்பான சேவைகளை இணையதளத்தின் மூலம் 82.80 கோடி மதிப்பிலான 151 ஒப்பந்தங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


தெற்கு ரயில்வே அதன் 6 மண்டலங்களில் உள்ள ரயில்வே தொடர்பான சேவைகளை இணையதளத்தின் மூலம் 82.80 கோடி மதிப்பிலான 151 ஒப்பந்தங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வாகன நிறுத்தம்,பார்சல், இடங்கள் விளம்பரம் ஏசி காத்திருப்பு அறைகள், கட்டண கழிப்பிடம் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இணையதள ஏலத்தின் மூலம் சேலம் மண்டலத்தில் 23.69 கோடி மதிப்பிலான 53 ஒப்பந்தங்களும் சென்னை மண்டலத்தில் 28.09 கோடி மதிப்பிலான 45 ஒப்பந்தங்களும் திருச்சி மண்டலத்தில் 8.32 கோடி மதிப்பிலான 18 ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன.


இணைய வழி ஏலங்களில் நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்வதால் அதிக போட்டி ஏற்பட்டு ரயில்வேக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது





 


Similar News