கொரோனாவை இந்தியா தைரியத்துடனும், உறுதியுடனும் எதிர்கொண்டது ! - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கொரோனா வைரஸ் தொற்றை தைரியத்துடனும், நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இந்தியா எதிர்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2021-10-15 10:24 GMT

கொரோனா வைரஸ் தொற்றை தைரியத்துடனும், நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இந்தியா எதிர்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சர்வதேச நிதியம், உலக வங்கி, ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கலந்து கொண்டார்.


இக்கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், உலக பொருளாதார மீட்சி மற்றும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவு, நிதி மற்றும் சுகாதார துறைகளில் நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்குதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் போன்றவை ஜி20 நாடுகளின் கொள்கை இலக்குகளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இது பற்றி மத்திய நிதியமைச்சர் சீதாராமன் பேசும்போது, கொரோனா பெருந்தொற்றின்போது இந்தியா தைரியத்துடனும், நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டது என்றார். இப்பெருந்தொற்று காலத்தில் உலகத்திற்கு இந்தியா முக்கிய பங்காற்றியது எனக் கூறினார்.

Source: News 7 Tamil

Image Courtesy: Twiter


Tags:    

Similar News