இந்திய கடற்படை தளத்தில் விபத்துக்குள்ளான இரண்டு விமானிகளின், நலம் விசாரித்தார் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய கடற்படை தளத்தில் விபத்துக்குள்ளான இரண்டு விமானிகளின், நலம் விசாரித்தார் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Update: 2019-11-17 04:40 GMT

கோவாவில் இந்திய கடற்படை தளத்தில் இருந்து மிக் 29 கே ரக பயிற்சி விமானம் ஒன்று வழக்கம்போல் பயிற்சி மேற்கொள்வதற்காக கேப்டன் எம். ஷியோகாண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் ஆகிய 2 விமானிகளுடன் பறந்து கொண்டிருந்தது. திடீரென வலதுபுறம் ரெக்கையில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதில் இருந்து 2 விமானிகளும் பேராஷூட் உதவியுடன் வெளியே குதித்து தப்பி விட்டனர்.


இந்நிலையில், கோவாவில் மிக் ரக பயிற்சி விமான விபத்தில் இருந்து தப்பிய 2 விமானிகளிடம் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நலம் விசாரித்து உள்ளார். இருவரும் நலமுடன் உள்ளனர் என்று கிடைத்த தகவல் மிகுந்த திருப்தியளிக்க கூடியது. அவர்கள் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக வேண்டி கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்




https://twitter.com/rajnathsingh/status/1195619386200977408?s=19 Attachments area

Similar News