4 விக்கெட் கீப்பர்களை கொண்டு களமிறங்கிய இந்திய அணி!!!!

4 விக்கெட் கீப்பர்களை கொண்டு களமிறங்கிய இந்திய அணி!!!!

Update: 2019-07-02 10:16 GMT

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இன்றைய வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் நான்கு விக்கெட் கீப்பர்கள் விளையாடுகின்றனர் பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.


இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம் என்பதால், பவுண்டரி எல்லை சிறியதாக இருப்பதாலும், இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.
கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், முதன் முறையாக உலக கோப்பை போட்டியில் களமிறங்குகிறார். இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். தவிர, தினேஷ் கார்த்திக் (கோல்கட்டா), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரிஷாப் பன்ட் (டில்லி) என மற்ற மூன்று வீரர்களும் ஐ.பி.எல்., தொடரில் விக்கெட் கீப்பர்களாக செயல்பட்டுள்ளனர்.


Similar News