இந்தியாவின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன - ராஜ்நாத்சிங்!

இந்தியாவின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன. எதிரி நாடுகளால் எதுவும் செய்ய இயலாது என்று ராஜ்நாத் சிங் பெருமையுடன் கூறியுள்ளார்.

Update: 2024-03-30 09:27 GMT

இந்தியாவும் அதன் எல்லைகளும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் ராஜலட்சுமி கூறியதாவது :-

இந்திய சீன எல்லை விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். இது தொடர்பான கேள்விகள் எனக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியதில்லை. நாட்டின் நலன்களை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு என்ன கூற முடியுமோ அவற்றைக் கூறியுள்ளேன். பாதுகாப்புத் துறையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வெளிப்படையாகக் கூற முடியாது. ஐந்தாண்டுகளாக நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வருகிறேன். அதற்கு முன் உள்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறேன்.

எனது அனுபவத்தை கொண்டு பார்க்கும் போது இந்தியாவும் அதன் எல்லைகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன. நாட்டு மக்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன். ராணுவத்தின் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அக்னி வீரர்கள் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான கேள்விகளில் சாரம் இல்லை.

அக்னி வீரர்கள் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு அதிக அளவில் இளைஞர்களை தேர்வு செய்வதன் மூலம் ராணுவத்தின் திறனை மேம்படுத்த முடியும். ராணுவம் இளமை துடிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். வழக்கமாக முப்பது முதல் 50 என்பதை படைவீரர்களின் வயதாக இருக்கும் ஆனால் 18 முதல் 20 வயது வரை கொண்ட அக்னி வீரர்கள் என்ற பெயரில் படைவீரர்களாக பொறுப்பேற்கும் போது சவால்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கிறது. அதேவேளையில் மூத்த படை வீரர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறார்கள் .

இது தொழில்நுட்பத்துக்கான சகாப்தம் ஆகும். இந்திய இளைஞர்களும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அது போன்ற இளைஞர்களே அக்னி வீரர்களாக ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோர் எதிர்காலத்தில் துணை ராணுவ படைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்த திட்டத்தில் ஏதாவது குறைபாடு இருப்பது தெரிய வந்தால் அதை சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ராணுவத்தில் குறுகிய காலத்துக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022 ஜூன் மாதம் அமல்படுத்தியது 17.5 முதல் 21 வயது வரையிலான வீரர்களை நான்காண்டு கால பணிக்கு தேர்வு செய்யும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


SOURCE :Dinamani

Similar News