அயோத்தியில் ராமர் கோவில்: ஜப்பானிய அனிமேஷன் இயக்குனரான யுகோ சகோவின் அற்புதமான திரைப்படப் பங்களிப்பு.!

அயோத்தியில் ராமர் கோவில்: ஜப்பானிய அனிமேஷன் இயக்குனரான யுகோ சகோவின் அற்புதமான திரைப்படப் பங்களிப்பு.!

Update: 2020-08-05 06:54 GMT

ராமாயணம், திரைப்படங்களாகவும் தொடர் கதைகளாகவும் பல்லாண்டுகளாக பல ரூபங்களில் வலம் வருகிறது. ராமாயணத்தை ஒரு கார்ட்டூன் அனிமேஷன் வடிவில் தந்ததில் ஜப்பானிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான யுகோ சகோ பல தலைமுறைகள் தாண்டியும் மக்களின் மனத்தைத் தொடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காவியத்தை வடிவமைத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. யுகோ சகோ புத்த மதத்தை சேர்ந்தவர். அவர் மட்டும் வேறு ஒருவரிடம் 'ராமாயணா- இளவரசர் ராமரின் புராணம்' என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கும் பொறுப்பை விட்டிருந்தால், இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்காது.

சேதுசமுத்திர பாலத்தை கட்டி, ராணுவத்துடன் இலங்கையை நோக்கி ராமர் அணிவகுக்கும் போது, ஒரு ஆமை, ஒரு ஆக்டோபஸ், ஒரு மான் என அனைத்து சிறு சிறு உயிரினங்கள் கூட ராமபிரானுக்கு உதவி செய்வதை அவ்வளவு அற்புதமாக சித்தரித்திருப்பார். அந்த சித்திரம் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

ஸ்ரீ ரகுவர் கி வானர சேனா சேது பாந் ரஹி ,

ராவணா கி ஜீவன் கா ரக்ஷக் ஜக் மெய்ன் கோயி நஹின்

அதாவது ராமர் பாலத்தை கட்டிக் கொண்டிருக்கிறார், இந்த அண்டத்தில் யாராலும் ராவணனை காப்பாற்ற முடியாது என்ற இந்தப் பாடல் வரிகள் வரும் பொழுது கடலுக்குள் இருக்கும் சாதுவான மீன் கூட கற்களை அடுக்கி வைக்க உதவி செய்து கொண்டே இருந்தது.

இவையெல்லாம் சகோ பல்லாண்டுகளாக ராமாயணத்தை எந்த அளவு படித்து இருக்கிறார என்பதற்கு சில உதாரணங்கள். இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆன பிறகும் கூட குழந்தைகளுக்காக ராமாயணத்தை திருப்பிச் சொல்வதில் இந்த சித்திரத்தை மிஞ்ச எதுவும் இல்லை. இது நம்மை சுற்றி இருக்கும் சூழல், தாவரங்கள், விலங்குகள் என அனைத்தின் கொண்டாட்டம் ஆகும். தன் தந்தை தசரதரின் இறப்பைப் பற்றி கேள்விப்படும் ராமரின் தோள்களில் ஒரு அணில் அமர்ந்திருக்கிறது.

லக்ஷ்மணன், சீதை கூட விஷ்ணுவின் அவதாரமாகிய ராமரை அந்த ஒரு முக்கியமான காட்சியில் தொடவில்லை. சீதாவின் அன்புக்குரிய மான் அவரை இராவணனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது , இயற்ககைக்கு சகோவின் அஞ்சலி. ஜப்பானிய காமிக் நடை மற்றும் மங்காவின் அணிமேஷன் ஆகியவற்றைக் கொண்டு மிகவும் அற்புதமாக செய்யப்பட்டுள்ள இந்தப் படம் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் 1990களில் ஒளிபரப்பப்பட்டது. இன்னும் யூட்யூபில் இருக்கிறது. 1990களில் வளர்ந்த குழந்தைகள் இன்னும் இதைப் பார்ப்பதற்காக அங்கு செல்கின்றனர்.

குழந்தைகளை பொறுத்தவரை இந்தப் படம் ராமாயணத்தை வர்ணிக்கும் ஒரு மிகச் சிறந்த படமாகும். இந்தியா, கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் இந்தப்படம் ராமரின் கதையை கொண்டு சேர்ந்தது. பெரியவர்களுக்கு இது அடுத்த கட்டத்தை அடைவதற்கான ஒரு சிறந்த ஆரம்பம். இந்தியாவின் தற்போதைய கலாச்சார நாட்குறிப்பின் படி, இந்திய ஜப்பானிய கலாச்சாரங்கள் கூட்டமைப்பில் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய கலாச்சார அடையாளமாக இது நீடித்திருக்கிறது. இந்தப்படம் 1992ல் வெளியானது. ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தீவிரமடைந்து கொண்டிருந்த சமயம் அது.

1990களில் சகோ, வால்மீகியின் ராமாயணத்தை முழுவதுமாகப் படித்து இருந்தார். அவர் ராமரின் மீது கொண்ட பயபக்தி காரணமாக, அவருக்கு ஒரு மனித முகம் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து அதை அனிமேஷனில் எடுக்க முடிவு செய்தார் . ஒரு இந்திய அனிமேட்டரை அணுகினார். அவர் மும்பையை அடித்தளமாகக் கொண்ட மிகவும் பிரபலமான அனிமேஷன் தயாரிப்பாளரான மோகன். இந்த தயாரிப்பு சகோ மற்றும் மோகன் இருவரின் கூட்டு தயாரிப்பாகும். சகோ 450 கலைஞர்களை ஜப்பானிய மற்றும் இந்திய ஸ்டூடியோக்களில் இருந்து சேர்த்தார். அவர் இந்தியாவில் பல நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தார். இந்த தொடர்ச்சியான உரையாடல்கள், கலாச்சார பார்வையில் அவர் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. ஏன் சீதா அனுமனுடன் திரும்பி வர மறுத்தார் என்பதையோ ராவணனை தாக்க ராமருக்கு உண்டான தயக்கத்தையோ விவரிக்கும்போது இது உதவியாக இருந்தது. வன்ராஜ் பாட்டியா என்ற மும்பையை அடித்தளமாகக் கொண்ட இசை தயாரிப்பாளர் இந்த படத்திற்கு இன்னும் மறக்க முடியாத அளவிற்கு இசை அமைத்தார்.

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான மற்றொரு கூட்டுத் தயாரிப்பு உருவாகும் வரை இந்த தயாரிப்புதான் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒரு கலாச்சார பாலமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சகோ 2012ல் உயிரிழந்தார். அவருடைய மிகவும் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பிற்கு நாம் மரியாதை செலுத்த இன்னும் தாமதம் ஆகவில்லை.

Similar News