பாகிஸ்தானை உலகின் அபாயகரமான நாடாக அறிவித்த ஜோ பைடன்

உலகின் அபாயகரமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என ஜோ பைடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-15 12:52 GMT

உலகின் அபாயகரமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என ஜோ பைடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் பேசிய அவர், 'பாகிஸ்தானில் அணு ஆயுத பயிற்சி போதிய ஒருங்கிணைப்பு இன்றி இருப்பதாக விமர்சித்த அவர் இது ஆபத்து என குறிப்பிட்டார்.

அண்மையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 பக்க ஆவணம் அந்நாட்டு அரசு வெளியிடப்பட்டது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை இந்நிலையில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக ஜோ பைடன் அறிவித்திருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.


Source - Polimer News

Similar News