தீராத குறைகளையும் தீர்க்கும் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில்!
வேதாரண்யம் தாலுகாவிற்கு அருகில் இருக்கும் கள்ளிமேடு கிராமத்தில் குடி கொண்டிருக்கும் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் பற்றி காண்போம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கள்ளிமேடு எனும் கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருத்தலம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆகும். இது துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி என்ற பல பெயர்களுடன் பல்வேறு ஆலயங்களில் அருள் புரிந்தவரும் ஆதிசக்தி குடி கொண்டிருக்கும் இடம் இதுதான். கோவிலில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இங்கு வந்து நம்மை வணங்கினால் குறைகள் தீர்ந்து ஏழ்மையும் வகையும் காணாமல் போகும். மகப்பேறு கிடைக்கும் எனக்கூறிச் செல்கின்றனர். பக்தர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் நிலை கொண்டு பத்ரகாளி அம்மன் அருள் பாலிக்கும் ஊர் என்ற காரணத்தால் இவ்வூருக்கு காளிமேடு என்ற பெயர் வந்ததாகவும் அப்பெயர் கள்ளிமேடு என மாறியதாகவும் கூறுகின்றனர்.
இக்கோவில் இருக்கும் இடமான கள்ளிமேடு ஒரு அழகிய கிராமம் ஆகும். இக்கிராமத்தில் இருந்து வேதாரண்யத்தை 30 நிமிடங்களிலும் நாகப்பட்டினத்தை 60 நிமிடங்களிலும் அடையலாம். காளியை வழிபடுவோர் வாழ்வில் வரக்கூடிய அனைத்து வகையான துன்பங்களையும் போக்கி நிரந்தரமான நிம்மதியான வாழ்வடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.