உத்தரகோச மங்கை மரகத நடராஜர்: உருவானதற்கான பின்னணி வரலாறு!

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவானதற்கான பின்னணி வரலாறு.

Update: 2022-04-20 01:23 GMT

பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். இவர் தினமும் தன்னுடைய பாய்மரக் கப்பலில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாள் அப்படி கடலுக்குள் செல்லும் வேளையில் புயல் ஏற்பட்ட இவருடைய படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது. இதன் காரணமாக அங்கிருந்த ஒரு பாசி படர்ந்த கல்லை பிடித்துக்கொண்டு தன்னுடைய உடைந்த படகில் கரைக்கு வந்து சேர்ந்தார். 


படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக்கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுக்கு படிக்கல்லாக போட்டு வைத்தார். வீட்டுக்குள் சென்று வருபவர்கள் அந்த பாறைக்கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது. பாறை மின்னுவதை பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்தார். அந்த மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப்பாறை உள்ளது என்று தெரிவித்தார். 


பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழியனுப்பி வைத்தார். மேலும் இந்த ஒரு கல்லில் நடராஜர் சிலை செய்ய வேண்டும் பின்பு மன்னரின் ஆசை இலங்கையில் உள்ள சிற்பி ரத்தின சபாபதி நியமித்தார். சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கி சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். அப்போது நான் மரகத நடராஜர் சிலையை வடித்து தருகிறேன், மன்னா கவலை வேண்டாம் என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது. மிகவும் நுணுக்கமாக, நடராஜரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும்படி சிலையை வடித்தார். பின்பு அதனை கருவறை அமைத்து பிரதிஷ்டை செய்தனர். 

Input & Image courtesy: Malaimalar News

Tags:    

Similar News