ரயில்வே பாதுகாப்பில் ஒன்பதாண்டு கால மோடி அரசின் சாதனை

22 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் 90% குறைந்துள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-10 15:00 GMT

மதிய பழங்குடியினர் நலத்துறை மந்திரியை அர்ஜுன் முந்தா, டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ரயில்வே பாதுகாப்பில் ஒன்பதாண்டு காலம் மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-


கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்குகளை ஆராய்ந்தால் 2000- 2001 நிதியாண்டில் 473 ஆக இருந்த ரயில் விபத்துக்கள் 2022- 2023 நிதி ஆண்டில் 48 ஆக குறைந்துள்ளது அதாவது கடந்த 22 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் 90% வரை குறைந்துள்ளது. ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே பல முக்கியமான நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளது .


முக்கியமான ரயில் பாதுகாப்பு சொத்துக்களை மாற்றுதல், புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக கடந்த 2017 - 2018 ஆம் நிதி ஆண்டில் 'ராஷ்டிரிய ரயில் சன் ரக்ஷா கோஷ்' என்ற திட்டத்தின் கீழ் பெரும் நிதி ஒதுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ரூபாய் ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி கணிசமான முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI



Similar News