பல குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிபவர்கள் கிறிஸ்தவர்கள் - "பிரதமர் இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் பாராட்டு"

Update: 2023-12-26 01:26 GMT

நாடு முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதியான இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்தவ மத முக்கிய பிரமுகர்களையும் பாதிரியார்களையும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, உலக மக்களுக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் கிறிஸ்துமஸ் திருநாளில் எனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது ஏழைகளின் நலனுக்கானது, மேலும் கிறிஸ்தவ சமுதாயம் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். 

கிறிஸ்தவர்களை பல பள்ளிகளை நடத்தி பல குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிகின்றனர், மேலும் அவர்கள் சமூக நீதிப் பக்கம் நிற்பவர்கள். நாட்டிற்காக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பங்களிப்பும் இந்த நாடு பெருமையுடன் அங்கீகரிக்கிறது என்று கூறி பாராட்டினார்.

அதோடு கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு போப்பை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பாதிரியார்களுடன் இந்த சந்திப்பில் பகிர்ந்துள்ளார். 

Source : Dinamalar 

Similar News