இந்தியாவை பெருமைப்படுத்த உழைக்க வேண்டும்.. இளைஞர்களுக்கு மோடி கொடுத்த அட்வைஸ்..
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு அவர் இளைஞர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை வழங்கினார். இது பற்றி அவர் கூறும் பொழுது, நாம் ஒரு நொடி கூட வீணடிக்க கூடாது. குருக்கள் நமக்கு இந்த போதனைகளை அளித்துள்ளார்கள் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா தனது சொந்த மக்கள் , ஆற்றல், உத்வேகங்கள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளது. நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ளும் போது உலகம் நம்மை வித்தியாசமாக பார்க்கிறது. நாம் இன்னும் ஒரு நொடி கூட வீணடிக்க கூடாது. குருக்கள் நமக்கு இந்த போதனைகளை அளித்துள்ளார்கள். நாட்டின் பெருமைக்காகவும், புகழுக்காகவும் நாம் வாழ வேண்டும்.
இந்த ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் 'வீர் பால் திவாஸ்' நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு முதல் முறையாக டிசம்பர்26ம் தேதி வீர் பால் திவாஸ் கொண்டாடப்பட்டது. உலக அரங்கில் தற்பொழுது இந்திய இளைஞர்களின் சக்தி பிரதிபலித்து வருகிறது. இந்திய இளைஞர்களுக்கு என்ன தனி முத்திரையை பதிக்கும் விதமாக இன்றைய காலகட்டங்களில் இருக்கும் இளைஞர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழியுறுத்திருக்கிறார்.
Input & Image courtesy: News