தமிழ் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் எதிர்கட்சிகள்..! நெல்லை பிரச்சாரத்தில் பிரதமர் பேச்சு!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தின் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டது அந்த தேர்தல் அறிக்கையிலும் தமிழகத்திற்கான பல திட்டங்களை அறிவித்துள்ளோம், முத்ரா திட்டத்தில் கூடுதல் கடன் வசதி வழங்கப்படும், ஏழைகளுக்கு அடுத்த ஐந்து வருடங்களில் மூன்று கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் உலகெங்கும் தமிழ் மொழி பரவ நடவடிக்கை எடுக்கப்படும் என பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகப் பெண்கள் என்னை பெருமளவில் ஆதரிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்குக் காரணம் நான் மக்களின் துன்பங்களையும் பெண்களுக்கு வேண்டியவற்றையும் அறிந்து கொண்டு அவற்றை திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறேன். மகளிர்க்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதை எனது எண்ணம்!
இண்டி கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரசும் எதிர்ப்பு மற்றும் வெறுப்பு சித்தாந்தங்களை கொண்டுள்ளது, தமிழ் பாரம்பரியத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள், மேலும் செங்கோல் மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என நினைத்துப் பாருங்கள்! என்று பேசினார்.
Source : Dinamalar