மத்திய பட்ஜெட்: புற்றுநோய் மருந்துக்கு முழு வரிவிலக்கு.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காலை 11 மணிக்கு தொடங்கி தனது உரையை பகல் 12 30 மணிக்கு நிறைவு செய்தார். சரியாக 84 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். அனைவரும் எதிர்பார்த்த வகையில் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுமா அல்லது சலுகை ஏதாவது கொடுக்கப்படுமா? இந்த பட்ஜெட்டில் என்று அனைவரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவி வகித்த பிறகு, தற்போது இந்த நோய்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. புற்றுநோய் மருந்துக்கு வரிவிலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கலின் போது கூறி இருக்கிறார். மேலும் மூன்று மருந்துகளின் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றம் சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கேன்சர் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் மேலும் அதிக மருந்துகளுக்கு கலால் வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். 25 அரிய தாதுக்களுக்கும் கலால் வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது.