போதையில் சிக்கி இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை: கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

Update: 2025-02-15 13:27 GMT

மதுரையில் வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கைப்பேசி, பணத்தைப் பறித்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்களுடன் சேர்ந்து கீழ்மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து புதன் கிழமை மது அருந்தினார்.


அப்போது, அந்த வழியாக வந்த பிகார் மாநி லத்தைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்தி அவரிடமிருந்த கைப் பேசி, ரூ.3 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். இதுதொடர்பாக ரயில்வே இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறுவர்கள், கார்த்திக் என 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இப்படி இளைஞர்கள் வாழ்க்கை தற்பொழுது போதைப் பொருள் காரணமாக வழி மாறி செல்கிறது. குறிப்பாக போதைப்பொருள் பழக்கத்தை மற்றும் அதன் புழக்கத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.  

Tags:    

Similar News