தமிழகத் துறைமுகங்களை உலகறிய செய்யும் மோடி அரசு: தமிழக எம்.பிக்கு கொடுக்கப்பட்ட சரியான பதில்!

தமிழ்நாட்டில் உள்ள சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை வெளிநாடுகளிலுள்ள பல்வேறு துறைமுகங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையின் உறுப்பினர் ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சென்னை துறைமுகம் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் பெரிய துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து சரக்கு கப்பல்கள் போக்குவரத்து தொடர்ந்து நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா, தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க சென்னை துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. காமராஜர் துறைமுகம், ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள முக்கிய சர்வதேச துறைமுகங்களுடன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக தொடர்பை கொண்டுள்ளது.
இதே போல வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கொழும்பு, மாலே, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், தாய்லாந்து. மலேசியா, சிங்கப்பூர். சீனா, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, ரஷ்யா. மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு துறைமுகங்களுடன் சரக்கு போக்குவரத்து இணைப்பை கொண்டுள்ளது.