மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை ஏற்றுமதி:அபேடாவின் அசத்தல் முயற்சி!
இந்திய மாதுளையை தொலைதூர சந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாக மதிப்புமிக்க இந்திய பக்வா வகை மாதுளை வணிக கப்பல் மூலம் வெற்றிகரமாக நியூயார்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாகும் இதுவரை பாரம்பரியமாக விமானம் மூலம் மாதுளை அனுப்பப்படும். தற்போது செலவு குறைந்த நிலையான கடல் வழி சரக்குப் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது
2023-ம் ஆண்டில் மாதுளைப் பருவத்தின் போது வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA),மாதுளையை விமானம் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பியது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான ஐசிஏஆர், மாதுளைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து 60 நாட்கள் வரை மாதுளையின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை வெற்றியடையச் செய்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது
இது குறித்து அபேடா தலைவர் அபிஷேக் தேவ் பேசுகையில் பழங்களை உலகச் சந்தைக்கு அனுப்புவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார்.மாம்பழம், மாதுளை போன்ற இந்திய பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அபேடா ஆதரவு அளித்து வருகிறது என தெரிவித்தார்.இந்திய விவசாயிகள் தங்கள் பழங்களை அமெரிக்கா போன்ற உயர் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது சிறந்த பயன் அடைவார்கள் எனவும் இந்திய மாம்பழங்கள் ஏற்கனவே சுமார் 3500 டன் வருடாந்திர ஏற்றுமதியை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார் வரும் ஆண்டுகளில் மாதுளையும் அதிக ஏற்றுமதியை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மும்பையைச் சேர்ந்த பழங்கள்,காய்கறிகளின் முன்னணி ஏற்றுமதியாளரும்,அபேடா-வில் உடன் பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதியாளருமான கே பீ எக்ஸ்போர்ட்ஸ் இந்த சரக்கை அனுப்பியது. இந்த சரக்கில் உள்ள மாதுளைகள் கே பீ எக்ஸ்போர்ட்ஸ் பண்ணைகளிலிருந்து நேரடியாக பெறப்பட்டவை என கூறப்படுகிறது