பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும்! ராஜ்நாத் சிங் உறுதி!
நேற்று ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரி பஹல்காம் என்ற இடத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
இந்த நிலையில் ஒப்படை தளபதிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார் அதில் பேசிய அமைச்சர் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவிகள் உயிர்களை இழந்தோம் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்திற்கு எனது இறக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவில் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன் நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளோம் மிக விரைவில் துல்லியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதையும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள் என்று உறுதியளித்துள்ளார்