பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா சபை.. பாகிஸ்தானுக்கு கொடுத்த வார்னிங்!
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஐக்கிய நாட்டு சபை குறிப்பாக இது பற்றிய அவர்கள் கூறும் பொழுது, 'எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது' என, தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணியர் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் பலியாகினர்.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரச்சினைகளுக்கு பயங்கரவாதம் என்றுமே ஒரு நாளும் தீர்வு தராது. இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர், ஜெரோம் போனாபோன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, "எந்த சித்தாந்தமும், நோக்கமும் இன்றி அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், பஹல்காமிலும் நடத்தப்பட்ட தாக்குதலை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என கூறினார்.