பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்:முப்படைகளுக்கு முழு சுதந்திரம்!

Update: 2025-04-29 16:44 GMT

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஏப்ரல் 29 உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ராணுவ தளபதி கடற்படை தளபதி விமானப்படை தளபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பங்கேற்றுள்ளனர் 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும் அதற்காக இந்தியா கொடுக்கப் போகும் தகுந்த பதிலடி தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி அளித்துள்ளதாக கூறப்படுகிறது 

முன்னதாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைத்து பாகிஸ்தானிற்கான விசாரித்து அட்டாரி எல்லை மூடல் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவி இடங்கள் ரத்து ஆகிய ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது 

Similar News