கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்தது
அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடைபெற்றதாக கூறப்படுகிறது இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைகளின் கடும் போர் பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது அதோடு இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அதுமட்டுமின்றி பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைகள் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுகளும் பதற்றத்தை அதிகரிப்பதாக ஐநா கவுன்சில் உறுப்பினர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இரு தரப்பு ரீதியாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது