இறுதியானது பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:மத்திய அமைச்சகம் அறிவித்த குட் நியூஸ்!
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது முன்னதாக பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த பேச்சுவார்த்தை துவங்கினாலும் இந்தியர்களுக்கு விசா பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் கார் மற்றும் மதுபானத்திற்கான வரி விகிதம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் ஒரு முடிவில்லாமல் இழுபறியே இருந்து வந்தது
இந்த நிலையில் இறுதியாக இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கொய்மர் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் அப்பொழுது இரு நட்டு தலைவர்களும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்
இதன் மூலம் உலக நாடுகளுக்கான சந்தைகளை திறக்கப்படுவதுடன் மக்களுக்கிடையான தொடர்புகளும் அதிகரிக்கும் மேலும் இந்த பேச்சு வார்த்தையின் பொழுது பிரிட்டன் பிரதமரை இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்