போர்நிறுத்தம் பிறகும் தனது முடிவில் மாறாமல் இருக்கும் இந்தியா:கோரிக்கை விடும் பாகிஸ்தான்!

Update: 2025-05-14 13:54 GMT

சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்திய எல்லையிலும் பாகிஸ்தானின் எல்லைகளும் கடும் பதற்றம் நிலவி வந்தது மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த தூதரக உறவு துண்டிப்பு உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது

அந்த வகையில் தான் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது மேலும் சிந்து நதி நீரை நிறுத்தியது அதுமட்டுமின்றி செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் நிறுத்தியது இப்படி இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடியாக விழுந்தது ஏற்கனவே அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அதோடு பாகிஸ்தானில் நடத்திய பயங்கரவாத தாக்குதல் இருக்கு பதிலடியையும் இந்தியா கொடுத்ததால் பெரும் விளைவுகளையும் பாகிஸ்தான் சந்தித்தது

அச்சமயத்திலே நதிநீரும் நிறுத்தப்பட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் கடந்த 12ஆம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர் நிறுத்தப்பட்டது. ஆனால் பயங்கரவாதம் தொடர்பான ஏதேனும் நடவடிக்கை தென்பட்டால் இந்தியா அதை போராகவே கருதும் என்று கூறியுள்ளது போர் நிறுத்தப்பட்ட பிறகும் சிந்து நதிநீரை திறந்து விடப் போவதில்லை என்று முடிவில் இருந்து இந்தியா மாறாமல் உள்ளது

பயங்கரவாதத்தை கைவிடும் வரையில் சிந்து நதி நீரின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது இந்த நிலையில் சிந்து நதிநீரை மீண்டும் திறந்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது அதாவது பாகிஸ்தானின் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தண்ணீர் நிறுத்தி வைப்பதால் நாட்டின் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாகவும் அதனால் தண்ணீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை விடுத்துள்ளது. 

Tags:    

Similar News