ப்ராஜெக்ட் லயன் திட்டம்: சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு!
குஜராத் மாநிலத்தில் சிங்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் 'ப்ராஜெக்ட் லயன்' என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள பதிவிற்குப் பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி, “மிகவும் ஊக்கமளிக்கும் தகவல் இது என்று குறிப்பிட்டுள்ளார். ‘ப்ராஜெக்ட் லயன்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குஜராத் மாநிலத்தில் வசிக்கும் சிங்கங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது மட்டுமின்றி, அவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன என்பதை அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.