ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி: பாதுகாப்பு துறை அமைச்சர் பெருமிதம்!
ஆயுதப் படைகளை அணிதிரட்டுவது முதல் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான இடத்தில் உபகரணங்களை வழங்குவது வரை எங்கள் படைகளின் தடையற்ற தளவாட மேலாண்மை - ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஜூலை 27, 2025 அன்று வதோதராவைச் சேர்ந்த கதி சக்தி விஸ்வவித்யாலயா (ஜிஎஸ்வி) பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் வாயிலாக கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். இன்றைய சகாப்தத்தில், போர்கள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களால் மட்டுமல்ல, அவற்றின் பொருத்தமான தருண விநியோகத்தாலும் வெல்லப் படுகின்றன என்றும், ஆபரேஷன் சிந்தூர் சிறந்த தளவாட மேலாண்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருட்களை வினியோகிப்பதற்கான ஒரு செயல்முறையாக மட்டுமல்லாமல், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கண்ணோட்டம் வாயிலாக தளவாட மேலாண்மையைப் பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் வலியுறுத்தினார். "எல்லையில் போராடும் வீரர்களாக இருந்தாலும் சரி, பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களாக இருந்தாலும் சரி, ஒருங்கிணைப்பு அல்லது வளங்களை முறையாக நிர்வகிக்காமல் இருந்தாலும் சரி, வலுவான நோக்கங்கள் கூட பலவீனமடைகின்றன. தளவாடங்கள் என்பது குழப்பத்தைக் கட்டுப்படுத்தும் வலு கொண்டவை. ஆயுதங்களால் மட்டுமல்ல, சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆதாரவள மேலாண்மையாலும் வலிமை அளவிடப்படுகிறது. போர், பேரிடர் அல்லது உலகளாவிய தொற்றுநோய் என எதுவாக இருந்தாலும், அதன் தளவாடத் திறனை வலுவாக வைத்திருக்கும் நாடு மிகவும் நிலையானது, பாதுகாப்பானது மற்றும் திறமையானது என்று அவர் கூறினார், அதே நேரத்தில் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் விருப்பங்களுக்கு உத்வேகம் அளிப்பதில் ஜிஎஸ்வி போன்ற நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தளவாடங்களின் முக்கியத்துவத்தை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இது உற்பத்திக்கு முந்தைய நிலையிலிருந்து நுகர்வு வரை ஒவ்வொரு படியையும் இணைக்கும் முக்கிய தூண்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தளவாடங்களின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். கோவிட் காலத்தில் லட்சக்கணக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படும் நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றடைந்தபோது அது வகித்த முக்கிய பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.