பசுமை தொழில்நுட்பம்: இந்தியா எடுத்து வைக்கும் புதிய மாற்றத்தின் தொடக்கம்!
மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பம், தற்சார்பு உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தனது தொழில்துறை சூழலை எவ்வாறு சிறப்பாக மேம்படுத்தி வருகிறது? என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். மின்சார வாகன போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பம், தற்சார்பு உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தனது தொழில்துறை சூழலை எவ்வாறு சிறப்பாக மேம்படுத்தி வருகிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பம், தற்சார்பு உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தனது தொழில்துறை சூழலை சிறப்பாக மேம்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி எழுதியுள்ளார். இலக்கு நோக்கிய சிறந்த திட்டங்களும் அரசு-தனியார் கூட்டு செயல்பாடும் இந்த மாற்றத்தை இயக்குகின்றன."