இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் உற்பத்தியை எட்டியுள்ளது. கடுமையான வானிலை சூழல்களுக்கிடையே கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12 சதவீதம் பெரும் வளர்ச்சியுடன் 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1.45 லட்சம் டன் அளவிற்கு இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்துள்ளது.
கனமழைக்கு இடையே 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் 6.47 லட்சம் டன் அளவிற்கு உற்பத்தி (7.8 சதவீதம் வளர்ச்சி) செய்து 5.01 லட்சம் டன் (10.7 சதவீதம் வளர்ச்சி) அளவிற்கு விற்பனை செய்துள்ளது. 43,215 மீட்டர் அளவிற்கு (11.4 சதவீதம் அதிகம்) சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
சவால் மிகுந்த வானிலை சூழலுக்கிடையே சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டு உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரித்ததற்காக இந்திய மாங்கனீசு தாது நிறுவன குழுவினருக்கு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அஜீத் குமார் சக்சேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.