பிரதமரை சந்தித்த தமிழ்நாட்டு விவசாயிகள்: மோடி பகிர்ந்த வியப்பான தருணம்!
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் குழுவைச் சந்தித்தார். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தித் திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி கேள்விப்பட்டதில் மோடி வியப்படைந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் நேற்று காலை நாடாளுமன்றத்தில் பிரதமரை சந்தித்தனர். இதுகுறித்து பிரதமர் தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி திறனை ஊக்குவித்தல், நிலைத்தன்மையை அதிகரித்தல் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றில் தமிழ்நாட்டு விவசாயிகளின் கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகம் அளிப்பதாக இருந்தது என்று அப்பதிவில் பிரதமர், தெரிவித்துள்ளார்.