காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு முதல் சரக்கு ரயில் வருகையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது பிராந்தியத்தை தேசிய சரக்கு கட்டமைப்புடன் இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவின் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர், இந்த வளர்ச்சி ஜம்மு காஷ்மீரில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது கூறியிருப்பதாவது, “ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் இணைப்புக்கு ஒரு நன்னாள்! இது முன்னேற்றத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.” என கூறி உள்ளார்.