கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை.. மாநில அரசு வெளியிட தயக்கம் காட்டுவது ஏன்?

Update: 2025-08-11 15:23 GMT

தமிழ்நாட்டில் கீழடியில் கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை வாயிலாக பெறப்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கை துறை சார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என்றும், இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ, அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைகள் நிபுணர்களின் பரிசீலனையில் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள், காலவரிசை, விளக்கம், முன்னிலைப்படுத்துதல் மற்றும் விரிவான பகுப்பாய்வுகள் போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் அமைச்சர் கூறினார். 

2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கிடையே இந்தப் பகுதியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எனினும் இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

Similar News