பக்தர்கள் ஒன்று சேர்ந்தால் அறநிலைத் துறை தாங்குமா? திருச்செந்தூரில் அரங்கேறிய பரபரப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபத்திற்குள் காலையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் காத்திருந்த நிலையில், காலை 6.30மணி அளவில், சண்முக விலாச மண்டபத்தில் புதிதாக போடப்பட்ட இரும்புக்கதவை திறந்து சிலரை அழைத்துச் சென்றதாக பக்தர்கள் கொந்தளித்தனர்.
இதனால் பாதுகாவலர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்னால் போடப்பட்ட இரும்பு கதவை வலுக்கட்டாயமாக திறந்து மண்டபத்திற்குள் சென்றனர். காவல்துறையினர் அங்கு வந்து நீண்ட நேரம் போராடி பக்தர்களை வெளியே அழைத்துச் சென்றனர். நீண்டநேரம் காத்திருந்ததால் பக்தர்கள் காத்திருக்க முடியாமல் செல்ல முயற்சித்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணக்காரர்களுக்கு மட்டும் ஒரு வழி, ஏழை, எளிய மக்கள் கடவுளை பார்ப்பதற்கு நீண்ட நெடிய நேரமாக கூட்டத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.