தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரின் மறைவு: ஹெச்.ராஜா ஆழ்ந்த இரங்கல்!
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் அவர்கள் மறைவிற்கு ஹெச் ராஜா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது, "தமிழகத்தை சேர்ந்த தீவிர தேசியவாதியும், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக நீண்ட காலம் தேசத்திற்காக பணியாற்றியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலந்து மாநில ஆளுநருமான மேதகு இல.கணேசன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. 1975 முதல் இன்று வரை கடந்த 50 ஆண்டு காலம் ஆர்எஸ்எஸ் - பாஜக என ஒரே நேரத்தில் சமகாலத்தில் பணியாற்றியவர்.
அவரோடு நீண்ட காலம் நெருங்கிப் பழகி தேசப்பணியாற்றிய நினைவுகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவை. அவரது இழப்பு தமிழுக்கும், தமிழகத்திற்கும் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், தேசபக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி" என குறிப்பிட்டுள்ளார்.