இனி மத்திய அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் தடையே இல்லை!! புதிதாக வந்திருக்கும் வழிமுறை!!
மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் செயல்படுத்தும் சில திட்டங்களுக்கான தொகையை நேரடியாக மத்திய அரசு வழங்கும் வேலையை தற்பொழுது தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு ரிசர்வ் வங்கியில் 92 தனித்தனியான கணக்குகளை தொடங்கியுள்ளது.
அதில் மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, விவசாயம் என பல துறைகளில் மத்திய அரசு சார்பில் உள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியை மாநில அரசின் துறைகளுக்கான செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று மத்திய அரசு செலுத்தும் நிதியை மாநில அரசுகள் வேறு சில பணிகளுக்கு பயன்படுத்துவது நடந்து கொண்டு வருகிறது. அதனாலேயே பல திட்டங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவது மிகவும் கடினம் ஆகிவிடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ரிசர்வ் வங்கி மூலம் மாநில அரசால் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் சம்பந்தப்பட்ட திட்டப் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கோ அல்லது திட்டப் பணியை மேற்கொள்ளும் நபருக்கோ விபரத்தை சேகரித்து மத்திய அரசு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் நிதியை செலுத்தும்.
இந்த புதிய நடைமுறையை 2024 -25 ஆம் நிதி ஆண்டில் தொடங்கி அதில் தமிழகமும் இணைந்திருப்பதாகவும், மத்திய அரசு வழங்கும் 96 திட்டங்கள் தமிழகத்திற்கும் சேரும் என்றும், தற்போது வரை 46 திட்டங்களுக்கு மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீதம் உள்ளவற்றிற்கு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் எல்லா திட்டங்களும் மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.