தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம்!! உபாத்​யாயா பேச்சு!!

Update: 2025-09-26 13:07 GMT

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் 3007 இளநிலை மற்றும் 3098 முதுநிலை மாணவர்கள் என மொத்தம் 7972 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

அதில் 304 மாணவர்கள் பதக்கம் வென்ற நிலையில் ஆர்​.என்​.ரவி அந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அதில் திவ்யா என்ற மாணவி ஆசியாவின் காமன்​வெல்த் கல்வி ஊடக மையம் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குஜராத் டாக்​டர் பாபா சாகேப் அம்​பேத்​கர் திறந்​தநிலை பல்​கலைக்​கழக துணைவேந்​தர் உபாத்​யாயா மாணவர்கள் பட்டம் பெறுவது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும், இந்த மாணவர்கள் நாட்டின் பங்களிப்பில் பங்கு கொள்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் பேசினார். 

மேலும் தேசிய கல்விக் கொள்கையானது நுழைவு மற்றும் வெளியேற்றத்தை வலியுறுத்துவதாகவும், தேசிய கல்விக் கொள்கை அதிக அளவில் மாற்றத்தை கொண்டு வருவதாக கூறினார். மேலும் உலகில் இருக்கும் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது என்றும், தேசிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும், 2047ன் நாட்டின் வளர்ச்சி உங்கள் கையில் என பேசினார். 

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பட்டமளிப்பு விழா நடக்காமல் உயர்​கல்​வித்​துறை அமைச்​சர்​கள் புறக்கணித்து வந்த நிலையில் நேற்று கோவி.செழியன் புறக்கணித்தார். அதையும் மீறி நடந்த பட்டமளிப்பு விழாவில் கோவையில் உள்ள கேபிஆர் மில் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 610 தொழிலாளர்கள் பட்டம் பெற்றதோடு ​ 17 பேர்​ பதக்கங்களையும் வென்றனர். 

Tags:    

Similar News