வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை! முகாம் பணிகளைப் புறக்கணித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பணியை புறக்கணித்த வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 3,4 ம் தேதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பணிகளை புறக்கணிப்பதாக அறிவிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவும், விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த செப்டம்பர் 3, 4 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்கள் ஊதியத்தை பிடித்தம் செய்து அதன் விவரங்களை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர்களிடம் கூறப்பட்டது.
மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி முகாம் பணிகளை புறக்கணித்த வருவாய்த் துறை அலுவலர்களிடம் காரணம் கேட்டு குறிப்பாணை ஏற்படுத்தவும், வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை என்ற அடிப்படையில் வேலைக்கு வராதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களிடம் கூறப்பட்டுள்ளது.