தலித் மக்களுக்கு முடி வெட்டும் உரிமையை மறுத்த இஸ்லாமிய சமூகம் : தமிழக ஊடகங்கள் பேச மறுக்கும் தீண்டாமை கொடூரம்

தலித் மக்களுக்கு முடி வெட்டும் உரிமையை மறுத்த இஸ்லாமிய சமூகம் : தமிழக ஊடகங்கள் பேச மறுக்கும் தீண்டாமை கொடூரம்

Update: 2019-07-14 18:48 GMT

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில், போஜ்பூரில் உள்ள தலித் மக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தலித் மக்களை தலைமுடி வெட்டவோ அல்லது ஷேவ் செய்யவோ கூடாது என்று இஸ்லாமிய மதத்தில் உள்ள ஒரு ஜாதியான சல்மானி சமூகம் மறுக்கிறது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


சல்மானி சமூகம் அவர்களை தீண்டத்தகாதவர்களாக தொடர்ந்து நடத்துவதாக பீப்பல்சனா கிராமத்தில் வசிக்கும் தலித்துகள் மொராதாபாத் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். "இது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது, ஆனால் இப்போது இந்த நடைமுறைக்கு எதிராக குரல் எழுப்ப முடிவு செய்துள்ளோம். இது தீண்டாமை ஊக்குவிப்பதாகும்" என்று கிராமத்தைச் சேர்ந்த தலித் ராகேஷ் குமார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.




https://twitter.com/IndiaToday/status/1149984617136566276?s=19


"சல்மானி சமூகம் எங்களைத் தொடாது" என்பதால் தனது தந்தை மற்றும் அவரது முன்னோர்கள் காலத்தில் முடிவெட்ட போஜ்பூர் நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது என்று ராகேஷ் கூறினார்.


"காலம் மாறிவிட்டது, இதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பப் போகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.




https://twitter.com/SwarajyaMag/status/1150067757662105600?s=19


தனக்கு புகார் கிடைத்ததாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் மொராதாபாத் மூத்த காவல்துறை சூப்பிரண்டு அமித் பதக் தெரிவித்தார். "குற்றச்சாட்டுகள் சரியானவை எனக் கண்டறியப்பட்டால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் கூறினார்.


உத்திர பிரதேச மாநிலத்தில் சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு சண்டையை “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல சொல்லி அடித்ததாக செய்தி பரப்பிய தமிழக ஊடகங்கள், அதே மாநிலத்தில் நடந்துள்ள இந்த தீண்டாமை கொடூரம் குறித்து அமைதி காத்து வருகிறது.


இதையும் படிக்க : சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு சண்டையை “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல சொல்லி அடித்ததாக செய்தி பரப்பினர்! ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது !!




https://twitter.com/sansbarrier/status/1150243166034907136?s=19


தமிழக ஊடகங்கள் இவ்வாறு பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


Similar News