இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு தப்லிக்கி ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையவை.. அதிர்ச்சி தகவல்..

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு தப்லிக்கி ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையவை.. அதிர்ச்சி தகவல்..

Update: 2020-04-02 07:26 GMT

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு COVID-19 பாதிப்பு புதுதில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் நிகழ்வோடு இணைக்க முடியும். அமைச்சகத்தின் பதிவின்படி, 2 வெளிநாட்டினர் உட்பட 14 மரணங்களும் அடங்கும்.

2020 ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 1,637 மற்றும் 38 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மத மாநாடு காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை நேற்று அதிகரித்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 386 பேர் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை 7,688 தப்லிகி உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், உள்துறை அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு முக்கியமாக புது தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள அலமி மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாஅத் ஏற்பாடு செய்த மத மாநாடு தான் காரணம் என்று கூறினார். 




தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1800 பேர் 9 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அகர்வால் கூறினார். LockDown காலத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், COVID-19 இன் கொடிய தொற்றுநோய்க்கு எதிராக வெற்றிபெற சமூக தூரம்தான் சிறந்த தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்தி, சபைகள் மற்றும் மதக் கூட்டங்களைத் தவிர்க்கவும் இணைச் செயலாளர் மக்களை கேட்டுக்கொண்டார்.

Similar News