லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் - முன்கூட்டியே மோப்பம் பிடித்த இந்திய உளவுத்துறை : தவிடு பொடியான சதித்திட்டம்.!

லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் - முன்கூட்டியே மோப்பம் பிடித்த இந்திய உளவுத்துறை : தவிடு பொடியான சதித்திட்டம்.!

Update: 2019-08-12 10:44 GMT

லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில் லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. லடாக் எல்லையில் பாகிஸ்தானின் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


அந்த விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. சி-130 சரக்கு விமானங்கள் விமானப்படை தளத்துக்கு வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இதையடுத்து இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.அதே வேளையில் காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை அமைதியாக கொண்டாடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.


Similar News