பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு - இன்று முதல் அமல்!
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ.2 குறைத்துள்ளது மத்திய அரசு. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினம் தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசின் என்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது அதன்படி பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா ₹2 குறைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக மத்திய மந்திரி கூறியிருந்தார். இதன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹96.72 ஆக இருந்தது இது இன்று முதல் 94.72 ஆக விற்பனை ஆகிறது. இதே போல டீசல் விலையும் ரூபாய் 89.62 இல் இருந்து 87.62 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று 100.73 ஆக குறைந்துள்ளது. இதே போல டீசல் விலையும் 94.33 லிருந்து 92.33 ஆக குறைந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் சுற்றுலா மற்றும் பயணத்தையும் அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.
SOURCE :DAILY THANTHI