பாகிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க பிரதமர் மோடி அடுத்த அதிரடி! தயாராகிறது இந்திய விமானப்படை!!

பாகிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க பிரதமர் மோடி அடுத்த அதிரடி! தயாராகிறது இந்திய விமானப்படை!!

Update: 2019-06-07 09:48 GMT


கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷி இ முகம்மது தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இஸ்ரேலிடம் இருந்து ரூ.300 கோடி மதிப்பிலான 100 குண்டுகளை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் போட்டுள்ளது.


இதன்படி, அதிநவீன திறன் கொண்ட ஸ்பைஸ் குண்டுகள் அடுத்த 3 மாதங்களில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். அவசர கால அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


இந்த குண்டுகள் 60 கிமீ தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. இந்த வெடிகுண்டில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்கல் திறன் விமானத்தில் உள்ள கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்பட கூடியது. மேலும் SPICE 2000, போர் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கியது ஆகும். 


சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பயன்படுத்தப்பட்டது போன்ற வெடிகுண்டுகளை இந்தியா வாங்குவது அடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. 


முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையை பாகிஸ்தான் தொடந்து செய்வதும், அந்த தீவிரவாதிகளை காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் கூடுருவச் செய்வதும் இப்போதும் தொடர்கிறது. இதற்கு நிரந்தரமாக முடிவுகட்ட பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார். எனவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை மொத்தமாக காலி செய்ய, மெகா செயல்திட்டதில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியின் அடுத்த அதிரடியை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Similar News