சட்ட மேதையின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்த பிரதமர்- டுவிட்டரில் புகழாரம்!
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதயொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் . அந்த பதிவில் அவர் "சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவினரின் அதிகாரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் நூற்றுக்கணக்கான வணக்கங்கள் ஜெய் பீம்" என குறிப்பிட்டுள்ளார்.