ரெயில் டிக்கெட் மோசடி : நாடு முழுவதும் 12 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை!
நாடு முழுவதும் 12 இடங்களில் சி.பி.ஐ ரெயில் டிக்கெட் மோசடி தொடர்பாக அதிரடியாக சோதனை செய்துள்ளது.
ரயில்களில் உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை மோசடி சாப்ட்வேர் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் 12 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் .
உத்திரபிரதேசம், பீகார் ,குஜராத் ,மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது மேற்படி மோசடி சாப்ட்வேர் அடங்கிய செல்போன்கள் டிஜிட்டல் பொருள்கள் என முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.